உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் பற்றி முடிவெடுப்பது ரணிலோ பாராளுமன்றமோ அல்ல. திசைகாட்டி தொடர்பில் அச்சமடைந்தவர்கள் மிகவும் பதற்றமடைந்து எமக்கெதிராக சேறுபூசும் கொள்கையை வகுத்துள்ளார்கள். -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் தோழர் டில்வின் சில்வா

(களுத்துறை மாவட்ட மீனவர் மாநாடு – 25.01.2024)

ஜனாதிபதி தேர்தலை, அரசியலமைப்பின் ஒரு வேலையை தேர்தல் ஆணைக்குழுவைத் தவிர வேறு எவரும் தீர்மானிக்கத் தேவையில்லையென்று தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் இரு தடவைகள் ஊடகங்களிற்கு கூறியுள்ளார். ஆக, காலம் வந்தவுடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது ரணில் விக்ரமசிங்கவோ அல்லது பாராளுமன்றமோ அல்ல. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்குத்தான் இருக்கிறது. எனவே, இந்த வருடம் செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். அதில் சந்தேகமில்லை.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாக்க வெற்றி பெருவார் என்பதில் சந்தேகமில்லை. எம்மவர் ஜனாதிபதியானதன் பின்னர் இந்தப் பாராளுமன்றம் எமக்குத் தேவையில்லையே! எனவே, இந்தப் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய பாராளுமன்றம் ஒன்றை நியமித்து இந்த நாட்டை உறுப்படியாக்க வேண்டும்.

அனேகமாக முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று நாங்கள் நினைக்கிறோம். தற்போதைய ஆய்வறிக்கைகள் என்ன கூறுகின்றன? அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவு யாருக்கு? மக்களின் தெரிவு இப்போது தேசிய மக்கள் சக்தியே அன்றி வேறெதுவும் இல்லை. சாதாரண மக்களின் ஆய்வுகள் மாத்திரம் அல்ல. உளவுத்துறை தகவல்களும் அதனைத்தான் கூறுகின்றன. எனவே, எவரும் பதற்றமடையத் தேவையில்லை. ஆனால், இப்பொழுது ஆட்சியாளர்கள் பதற்றமடைந்து இருக்கிறார்கள். எங்களிடமிருந்து தவறுதலாக வெளிவரும் ஒரு சொல்லை பிடித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். அதை வைத்துக்கொண்டு அவர்களுக்கு விரும்பிய கதையை புனைவார்கள். அந்தக் கதைக்கு ஊடக உரையாடல் இடம்பெறும். அதற்காக பிக்கெட்டிங் செய்வார்கள். பத்து பதினைந்து பேரை சேர்த்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். எமது கொள்கையை நாம் தெளிவுப்படுத்துகின்ற போதிலும் அதற்கு அவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள். ஏனென்றால், அந்தளவிற்கு தேசிய மக்கள் சக்தி அவர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. எனவே, இந்த நாட்டை நாசமாக்கிய சக்திகள் பயந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் எங்களுக்கு எதிராக சேறுபூசுகிறார்கள். அவதூறு கற்பிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *