தேர்தலை எண்ணி இருதலை கொல்லியாக விளங்கும் அரசாங்கம். -அநுர குமார திசாநாயக்க
நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்தலை நடத்த ரனில்,ராஜபக்ஷ அரசாங்கம் தயங்கி வருவதாகவும் இதற்கான முக்கிய காரணமாக தேசிய மக்கள் சக்தியின் பால் வாக்காளர்கள். எண்ணிக்கை தினம்,தினம் அதிகரித்து வருவதே காரணமாக இருக்கின்றதெனவும், தாம் எந்தத் தேர்தலையும் எந்தச்சந்தர்ப்பத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க பதுளையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாட்டில் தெரிவித்தார்.
தொடர்ந்து இங்கு உரையாற்றிய அவர் ஜனாதிபதி ரணில் முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதா,அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதா என இருதலை கொல்லியாக குழப்ப நிலையிலுள்ளதாகவும் தமது கட்சி எந்தத் தேர்தலையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும்,அதில் தமது கட்சி வெற்றிபெற்று மக்களுக்கான சிறந்த ஆட்சியை அமைக்கும் என்றும்தெரிவித்தார். இக்கூட்டத்தில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
(எம்.கே.எம்.நியார் பதுளை)