Monday, March 23, 2026
Latest:
உள்நாடு

பெளத்த பிக்கு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

“ரி – 56” (T56) ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், கம்பஹா மல்வத்து ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணியாற்றி வந்த பௌத்த பிக்கு ஒருவர் கொல்லபட்ட சம்பவம் தொடர்பில், மேலதிக சில விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, காரில் வந்த இனந்தெரியாத நான்கு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதுடன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (23) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக, மல்வத்து ஹிரிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
ஷனாராம மகா விகாரையில் சேவையாற்றி வந்த தம்ம ரத்தன என்ற 45 வயதுடைய தேரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மல்வத்து ஹிரிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *