நிறைவேறியது நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்..!
நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேறியது .
சட்டமூலத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு, எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிநின்றார்.அதன்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதன்படி , 46 மேலதிக வாக்குகளால் நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.