உள்நாடு

நாட்டுக்கு மீண்டும் புத்தெழுச்சி தருகின்ற புதிய அரசியல் பயணத்திற்கு தலைமைத்துவம் வழங்குவது தேசிய மக்கள் சக்தியே..! – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க

(தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதி மாநாடு – 2024.01.20)

 

மனச்சாட்சிகொண்ட, நாட்டுக்காக சட்டத்தையும் ஒழுக்கத்தையம் எதிர்பார்க்கின்ற மக்கள் இத்தடவை தெளிவாகவே எம்மைச் சூழ்ந்துள்ளார்கள். புத்தளம் மாவட்டத்தின் மூஸ்லீம் தோழர்கள் தமது பிரதநிதியாக அலி சப்றி றஹீமை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்பினார்கள். அப்படிப்பட்ட ஒருவரை புத்தளம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிவைக்க வாக்குகளை அளித்த நீங்கள் உங்களின் வாக்குகளை நினைத்து பெருமிதம் அடைகிறீர்களா? முஸ்லீம் சகோதர மக்கள் தமது உறுப்பினர் என நினைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்த அலி சப்றி றஹீம் தனது உறுப்பினர் சிறப்புரிமையைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் புரிந்து மாட்டிக்கொண்டார். எனினும் அடுத்த நாள் பாராளுமன்றத்திற்கு வந்து சட்டவாக்கத்திற்கும் கையை உயர்த்தினார். நேற்று சட்டதை மீறி எயார்போர்ட்டில் மாட்டிக்கொண்டவர் இன்று சட்டங்களை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் கையை உயர்த்துகிறார். இந்த சமூகம், பொருளாதாரம், சட்டம் மாத்திரம் சீரழியவில்லை. மனிதர்களின் விருப்புவெறுப்புகள், மனோபாவங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூக அமைப்புமே சீரழிந்துவிட்டது. ஆட்கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகரவை இரத்தினபுரியில் முதலாமிடத்தில் அனுப்பி வைக்கிறார்கள். கம்பஹாவில் இருந்து பிரசன்ன ரணதுங்கவை அனுப்பி வைக்கிறார்கள். களுத்துறையில் இருந்து ரோஹித அபேகுணவர்தனவை அனுப்பி வைக்கிறார்கள். கண்டியில் இருந்து மகிந்தானந்தவை அனுப்பி வைக்கிறார்கள். குருநாகலில் இருந்து ஜோன்ஸ்ரனை அனுப்பி வைக்கிறார்கள். அநுராதபுரத்தில் இருந்து மாவிலாறு எஸ்.எம். சந்திரசேனவை அனுப்பி வைக்கிறார்கள். மனிதர்களின் சிந்தனைப்போக்குகள் சிதைவடைந்துள்ள விதமே அதிலிருந்து தெளிவாகின்றது. “திருடனாக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு எவ்வளவாவது தருவாரென்றால்” என மக்கள் சிந்தித்தார்கள்.

அவ்வாறு சிந்தித்து ஒரு நாட்டை உருப்படியாக்கிட முடியாது. அதனால் அரசசேவையை மக்களுக்கு கௌரவமான சேவையை வழங்குகின்ற இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும். அரசியல் பரிசுத்தமாகி மக்கள் இதைவிட பண்புள்ளவர்களாக பிறரைப் பற்றிக் கரிசனை கொண்டவர்களாக மாறவேண்டும். புத்த தர்மம், கிறிஸ்தவ தர்மம், நபிகள் நாயகத்தின் தர்மம், இந்து தர்மம் ஆகிய நான்கு பிரதான சமயங்கள் இந்த சமூகத்திற்கு வழிகாட்டி வருகின்றன. இந்த அனைத்து சமயங்களும் பிறர்மீது கருணை காட்டவும், அன்பு செலுத்தவும், சகோதரத்துவத்தைக் வெளிக்காட்டவும் அருளுரை போதித்தபோதிலும் அந்த சமயங்களைக் கடைப்பிடிக்கின்ற குடிமக்கள் திருடர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கிறார்கள். அதனால் இப்போது அரசியலில் மாத்திரமல்ல சமூகத்திலும் பிரச்சினை நிலவுகின்றது. நாரம்மலவில் சாரதியொருவரை துப்பாக்கியால் சுட்ட பொலீஸ் உத்தியோகத்தர் “இவன் செத்துப்போய்விட்டானா தெரியவில்லை” எனக் கூறுகிறார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியவர் மனிதன் இல்லையா? அதிர்ச்சி இருக்கின்றதா? ஒரு நாட்டுக்கு இவ்விதமாக முன்நோக்கி நகரமுடியாது. குறிப்பாக 1978 இன் பின்னர் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் இறுதிப்பெறுபேறாக மாறியிருப்பது எமது கண்ணெதிரில் ஒட்மொத்த சமூகமுமே சீரழிந்துள்ளமையாகும். மிக அதிகமான சிறுமிகள் தமது நெருங்கிய உறவினர்களாலேயே பாலியல் தொல்லைகளுக்கு இலக்காகி உள்’ளார்கள். எம்மெதிரில் இருப்பது அவ்வாறான சமூகமாகும். பொருளாதாரம் உருப்படியாவிட்டது என்பதற்காக இந்த சமூகம் கரைசேர மாட்டாது. சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டுவிட்டால் மாத்திரம் கரைசேர மாட்டாது. ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்புமே புதிய மாற்றத்திற்கு இலக்காகக்கப்படல் வேண்டும். தேசிய மக்கள் சக்தி பாடுபடுவது அதற்காகவே. மனிதநேயமுள்ள சமூகமொன்றிற்காக அனைத்துப் பிரிவுகளையும் மாற்றியமைத்திடாமல் எமது நாட்டுக்கு முன்நோக்கி நகர இயலாது. அந்த சமூக மாற்றத்திற்கு அவசியமான அதிகாரத்தைப் பெற்றுத்தருமாறே நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

புதிய மாற்றமொன்று பற்றிய எந்தவிதமான உணர்வும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது. மக்களுக்கு உண்ண உணவு இல்லாவிட்டாலும் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளதென அவரும் அவருடைய சீடர்களும் கூறுகிறார்கள். மருந்துகள் இல்லாத, கல்விபெற முடியாத, மக்களுக்கு நன்மைகள் கிடைக்காத பொருளாதாரத்தில் உள்ள பிரயோசனம் என்ன? அவர்கள் பொருளாதாரத் தரவுகளைப் பார்க்கிறார்களேயொழிய மக்களின் வாழ்க்கையை அல்ல. பகிர்ந்தளிப்பதே அரசியலென ஒருசிலர் நினைக்கிறார்கள். எவ்வளவுதான் பகிர்ந்தளித்தார்கள்? ஓர் அரசியல் இயக்கமென்றால் மக்களை அனர்த்தங்களிலிருந்து மீட்டெக்க ஆவனசெய்ய வேண்டும். நாங்கள் முன்வருவது அத்தகைய விரிவான சமூக, பொருளாதார, அரசியல் இடையீட்டுக்காகவே. அந்த மாற்றத்திற்காக மக்களை விழிப்படையச் செய்விக்கின்ற மக்களை அணிதிரட்டுகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பாசறை ஒரு பக்கத்தில் இருக்கின்றது. மறுபக்கத்தில் மக்களை பாதிப்பிற்கு இலக்காக்கிய, வாழமுடியாத நிலையை உருவாக்கிய, மக்களை பிச்சைக்காரர்களாக்கிய, பகிர்ந்தளிக்கின்ற அரசியலை அமுலாக்குகின்ற, மக்களின் செல்வத்தை திருடுகின்ற அரசியல் இருக்கின்றது. இந்த நாட்டுக்கு மீண்டும் புத்தெழுச்சி தருகின்ற புதிய அரசியல் பயணத்திற்கு தலைமைத்துவம் வழங்குவது தேசிய மக்கள் சக்தியாகும்.

இந்தியாவில் வெள்ளைக்காரனை விரட்டியடிக்கின்ற தேசிய இயக்கம் வெள்ளைக்காரனை விரட்டியடித்த பின்னர் இந்தியாவை சந்திரனுக்கு கொண்டுசெல்லும்வரை இயங்கியுள்ளது. இந்த நூற்றாண்’டில் உலகம் பற்றி எதிர்வுகூறி அதற்கு ஒத்துவரத்தக்க பொருளாதார, அரசியல், சமூக மாற்றத்தை அந்நாட்டின் சமூகத்தில் மேற்கொண்டது. அப்துல் கலாம் சனாதிபதியானமை, தாழ்ந்த சாதிப் பெண் சனாதிபதியானமை வரை மாற்றத்தை ஏற்படுத்தி உலகின் ஐந்தாவது பலம்பொருந்திய பொருளாதாரமாக கட்டியெழுப்பியுள்ளார்கள். ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்களுக்கு அணுக்குண்டுத் தாக்குதல் நடாத்தியதால் தவிடுபொடியாக்கப்பட்டது. இலட்சக்கணக்கானோர் மடிந்தார்கள். தோல்வியை வெற்றிக்கான அடியெடுப்பாக மாற்றி ஜப்பான் எழுச்சிபெற்றது. எமது தலைவர்கள் அவ்வாறான நோக்கு இல்லாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரனை எதிர்த்து நின்றாலும் ஒரு தேசமென்றவகையில் பிரிந்து நின்றது. வெள்ளைக்காரன் போனபின்னர் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து மலையக மக்களை ஒதுக்கிவைத்தார்கள். 1956 இல் மொழிச் சட்டத்தைக் கொண்டுவந்து 1958 இல் கலவரம் உருவாக்கப்பட்டது. 70 இன் இறுதியில் வடக்கில் ஆயுதமேந்திய எழுச்சி தோன்றியது. 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. வெள்ளைக்காரனின் கையிலிருந்து ஆட்சியதிகாரத்தை எடுத்த நாளில் இருந்து நாங்கள் பிரச்சினைபட்டுக்கொண்டோம். இறுதியில் உலகில் பிச்சையேந்துகின்ற நாடாக மாற்றப்பட்டு அழிவின் அடித்தளத்திற்கே அமிழ்த்தப்பட்டது. இந்த நிலைமையை மாற்றியமைக்கின்ற புதிய தேசிய எழுச்சி, புதிய தேசிய ஒருமைப்பாடு அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லீம் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த கொள்ளைக்கார ஆட்சியை விரட்டியத்திட வேண்டும். இந்தியா வெள்ளைக்காரர்களுக்கு எதிராக ஒருகொடியின்கீழ் ஒன்றுசேர்ந்ததைப்போல் இந்த நாட்டை நாசமாக்கிய ஆட்சியாளர்களுக்கு எதிராக நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து தெம்புடையவர்களாக முன்வரவேண்டுமென குறிப்பாக புத்தளம் மாவட்டத்தின் சகோதர முஸ்லீம் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு பிரசைக்கும் சமயத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையை, தனது மொழியில் அரசுடன் செயலாற்றுவதற்கான உரிமையை, தமது கலாசார அடையாளத்துடன் தேசத்தை ஒருங்கிணைப்பதற்கான உரிமையை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் இயக்கமே தேசிய மக்கள் சக்தி. இங்கிலாந்தில் கறுப்பர் – வெள்ளையர் அனைவருமே, அமெரிக்காவில் கறுப்பர் – வெள்ளையர் அனைவருமே அதைப்போலவே பிரான்ஸிற்கு ஜேர்மனிக்குச் சென்றால் அவர்கள் நாட்டுடன் அடையாளப்படுத்தப்பட்ட இனத்தவர்களாக அழைக்கப்படுகிறார்கள். எனினும் இலங்கையில் இலங்கையர்களை சந்திக்காமல் தம்பியா, தமிழன், சிங்களவன் என்றவகையிலேயே இருக்கிறார்கள். உலகில் பிரிந்த எந்தவொரு நாடும் முன்நோக்கி நகரவில்லை. இந்த அழிவுக்கு எதிராக முதலில் நாங்கள் ஒன்றிணைவோம். இந்த ஆளும் வர்க்கத்தினரை விரட்டியடிப்பதற்கான முதலாவது அடியெடுப்பு அதுதான். அவ்விதம் விரட்டியடிப்பதன் மூலமாக உருவாகின்ற உணர்வினை, வலிமையை இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நீண்டகாலரீதியில் பேணிவரவேண்டும். இலங்கை வரலாற்றில் அண்மைக்காலத்தில் புரியப்பட்ட நித்திக்கத்தக்க சதித்திட்டமான உயிர்த்தஞாயிறு தாக்குதல் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட சதிகாரர்களை நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டும். திருடிய ஆதனங்களை கையகப்படுத்தி திருடர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். அரசியல்வாதிக்கு வழங்கியுள்ள அநாவசியமான சிறப்புரிமைகள் அனைத்தையும் நீக்கிடவேண்டும். ஏனைய பிரசைகளுக்கு சமமாகவே அரசியல்வாதிகளும் செயலாற்றவேண்டும். பொலீஸார், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரையும்போல் அரசியல்வாதிகளும் தமது செயற்பொறுப்பினை சரிவர ஈடேற்றுகின்ற புதிய மாற்றத்திற்கு இட்டுச்செல்கின்ற மறுமலர்ச்சி யுகமொன்றை ஆரம்பிக்கவேண்டும். பல தசாப்தங்களாக நாசமாக்கிய நாடடடை ஓரிரு வருடங்களில் மீட்டெடுக்க முடுடியுமென நினைக்க வேண்டாம். எனினும் ஆரம்பகட்டமாக உணவு, கல்வி, சுகாதாரம் தொடர்பில் உடனடி இடையீடு அவசியமாகும். எனினும் வாழ்க்கை என்பது உணவு, மருந்து வாங்குதல், பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுதல் மாத்திரமல்ல. எமது நாட்டு வளங்களை சிறப்பாக முகாமைசெய்து புத்தாக்க யுகமொன்றை உருவாக்குதல் மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்கு புத்துயிரளிக்கவேண்டும். புதிய மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் செல்வதற்கான தொடக்கநிலை தேசிய மக்கள் சக்தியின் கைகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதாகும். கட்டம்கட்டமாக மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்புவதை திட்டமிட்டமிட்ட அடிப்படையில் அமுலாக்குவோம். அதற்காக இற்றைவரை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் தலைவர்களுக்கு வாக்குகளை அளித்த அனைவரையும் ஒன்றுசேர்த்திடுவோம். பொதுத்தேர்தலாகவிருப்பினும் சனாதிபதி தேர்தலாகவிருப்பினும் முதலில் வருகின்ற எந்தவொரு தேர்தலின்போதும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியதிகாரத்திற்காக அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *