வாழ்க்கை செலவு அதிகரிப்பு – பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகும் மாணவர்கள்..!
தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக, பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடை விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மத்திய மாகாணத்தில் மாத்திரம் கடந்த வருடத்தில் 1,989 மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடை விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிர, நுவரெலியா மாவட்டத்தில் 570 மாணவர்களும், ஹட்டனில் 541 மாணவர்களும், கொத்மலையில் 319 மாணவர்களும், கம்பளையில் 250 மாணவர்களும் பாடசாலைகளில் இருந்து இடை விலகியுள்ளனர்.
தற்போதைய பொருளாதார நிலையினால், மாணவர்களின் இடை விலகல் அதிகரிப்படுமே தவிர, குறைவடையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(ஐ. ஏ. காதிர் கான்)