உள்நாடு

வாழைத் தோட்டம் அந்நஜ்மி பள்ளியில் கெளரவிப்பு நிகழ்வு.

கொழும்பு 12 வாழைத் தோட்டம் அல் அஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசலின் 100 வருட பூர்த்தியை முன்னிட்டு பள்ளிவாசலில் இயங்கும் கல்வி அபிவிருத்திக் குழு இப்பிரதேசத்தில் கல்வியில் சாதனை படைத்தவர்களையும் பள்ளிக்கு சேவையாற்றியவர்களையும் கௌரவிக்கும் வகையில் நஜ்மி விருது விழா 2023 மருதானை டவர் மண்டபத்தில் பள்ளிவாசலின் தலைவர் எம்.ஏ.எம்.நிஸ்வான் தலைமையில் இடம் பெற்றது.

நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக வர்த்தகர்களான அப்துல்லா சீ.எம்.நூர், டி.எப். கோல்டிங்ஸ் பணிப்பாளர் ஏ.எம்.பசூல்டீன் மற்றும் அல் ஹிக்மா கல்லூரியின் அதிபர்.எம்.எம்.மஹ்சூம் பள்ளிவாசலின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், நலன் விரும்பிகள், உலமாக்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

விசேட பேச்சாளராக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் பிரதித் தலைவர் அல் ஹாபிழ் மௌலவி இர்ஸாட் உவைஸ் (இனாமி) கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது வாழைத்தோட்டத்தில் உள்ள அல்-ஹிக்மா கல்லூரியில் கல்வி கற்று உயர் தரப் பரீட்சையில் மூன்று ஏ சித்திகளைப் பெற்று பல்கலைக் கழகம் சென்றள்ள 5 மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர் அவர்களுள் 1 வைத்தியர். 1 சட்டத்தரனி, 2 வர்த்தக முகாமைத்துவம் போன்ற துறைகளில் பல்வேறு பல்கலைக்கழககங்களில் பட்டங்கைளயும் பயிலும் மாணவர்களுக்கு தலா ஒர் இலட்சம் ரூபாவும் மேலும் இம் மாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வி முடியுறும் வரையும் மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாவும் இப் பள்ளிவாசல் நிர்வாக சபையினால் அனுசரனையில் தனவந்தர்களினால் வழங்கப்பட்டது.அத்துடன் இம் மாணவர்களை மேடையில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்..

க.பொ.த சாதாரண தரப் jm பரீட்சையில் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றவர்களுக்கும், தரம் ஐந்தாம் ஆண்டு பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் நினைவுச் சின்னங்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது டன் பள்ளிவாசலில் நடாத்தப்படும் குர்ஆன் மத்ரஸாவின் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், நஜ்மி பள்ளிவாசலில் கடந்த 35 வருடங்களாக பாலர் பாடசாலையினால் நடத்தப்பட்டு வருகிறது. அம் மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

விசேட அம்சமாக பள்ளிவாசல் நிர்வாக சபையில் நீண்ட காலமாக இருந்து சேவையாற்றிய மூவரும் இதன்போது நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எம்.ஏ.எம்.நிஸ்வான் தலைமை உரையை வழங்கினார். பொருலாளர் யு.எல்.எம்.அஸ்லம் பள்ளிவாசல் அபிவிருத்தி விஷயங்கள் தொடர்பாகவும் உரை நிகழ்த்தியது டன் இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மேடை ஏற்றப்பட்டன. வருடா வருடம் வாழைத்தோட்ட ப்பிரதேச வாழ் மாணவ மாணவிகளது திறமைகளை இனம் கண்டு இவ்வாறான நிகழ்வுகளை அப்பிரதேச ஜூமஆப் பள்ளிவாசல் நடாத்தி வருவதானல் எதிர்காலத்தில் இப்பிரதேச வாழ் மாணவர்கள் கல்வியில் முன்னேற ஆர்வம்காட்ட துவங்கியுள்ளனர் என அங்கு உரையாற்றிய பள்ளிவாசல் தலைவர் தெரிவித்தார்.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *