சாய்ந்தமருது ஏ.ஆர்.எம். முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருட இறுதி விருது வழங்கலும், பரிசளிப்பு விழாவும்..
சாய்ந்தமருது ஏ.ஆர்.எம். முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருட இறுதி விருது வழங்களும், பரிசளிப்பு விழாவும் (20) சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும், மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டு சிறப்பித்தார். கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்ட கல்வி அதிகாரியுமான என்.எம்.ஏ. மலீக் அவர்களும் விசேட அதிதிகளாக சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் றிப்கா அன்சார், பாலர் பாடசாலைக் கல்வி இணைப்பாளர் அஷ்ஷெய்க். ஐ.எல்.எம். அனீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலக ஆரம்ப குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வை.திருப்பதி, சாய்ந்தமருது பிரதேச செயலக ஆரம்ப குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.எஸ். சிரின், சாய்ந்தமருது பிரதேச செயலக ஆரம்ப குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். ஆயிசா, கல்முனை பிரதேச செயலக ஆரம்ப குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சங்கீதா சுதர்சன், காரைதீவு Radiant Academy பணிப்பாளர், முன்னாள் முதல்வரின் இணைப்புச் செயலாளர்களான ஏ.எல்.எம். இன்சாட், ஏ.ஜி.எம்.நிம்ஸாத் ஆகியோரும் பெரும்பாலான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இறுதியில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியினால் மாணவர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டன.
(நூருல் ஹுதா உமர்)