இலங்கை வருகிறார் ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர்.
ரொட்டரி இன்டர்நெஷனல் தலைவர் கோர்டன் ஆர். மிக்னலி நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கை வருகிறார்.
இந்த விஜயம் ரொட்டரி இன்டர்நெஷனலுக்கும் இலங்கை சமூகத்துக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமையுமென ஹொட்டரி கழகம் தெரிவித்துள்ளது. 225 நாடுகளில் 35 ஆயிரம் ரொட்டரி கழகங்கள் இருக்கின்றன. இவை சர்வதேச ரீதியாக பல மக்கள் நல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த நான்கு நாள் விஜயம் மூலம் ரொட்டரி இன்டர்நெஷனலுக்கும், இலங்கை சமூகத்துக்குமிடையே உறவு பலப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. தலைவர் கோர்டன் ஆர். மிக்னலி நான்கு நாள் விஜயத்தை சினமன் க்ரேன்ட் ஹோட்டலில் நடைபெறும் ரொட்டரி இளைஞர்களுக்கான சொற்பொழிவுடன் ஆரம்பிப்பார். ரொட்டரி இன்டர்நெஷனல் இலங்கைக்கு சுகாதார உதவிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தையும் சுகாதார அதிகாரிகளுடன் மேற்கொள்ளவுள்ளார். அவரது விஜயம் இலங்கைக்கு புதிய எதிர்பார்ப்புக்களை வழங்குகின்றது. ரொட்டரி இன்டர்நெஷனல் உள்ளூர் சமூகத்துக்குமிடையில் தொடர்பினை பலப்படுத்துமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.