உள்நாடு

முஸ்லிம் எயிட் ஊடாக 237 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

“முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா” (Muslim Aid) நிறுவனத்தால் கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கல்வித்தரத்தினை மேம்படுத்த கற்றல் உபகரண பொதிகள் கையளிக்கப்பட்டன.குறித்த  பாடசாலையின் அதிபர்  என்.எம்.அஹமட் நஷ்ரப் அவர்களின் தலைமையில் இன்று(17)  பாடசாலை பிரதான மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. இதில் 237 மாணவர்களுக்கு தலா 8500 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் கல்வியினை விருத்தி செய்ய ஒரு உந்து சக்தியாக இதன் மூலம் நன்மையடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வியை மேம்படுத்த முஸ்லிம் எயிட் கடந்த காலம் பல திட்டங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தி வருகிறது இதன் ஒரு பகுதியாக குறித்த பாடசாலையின் மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை மேம்படுத்த நடை முறைப்படுத்தப்பட்டது.
குறித்த  நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. நசூஹர்கான், முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.சி. ஃபைசர் கான், அல்-ஹாஜ் நவாஸ், அல்-ஹாஜ் அஜ்வர்தீன், முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் கல்வி அபிவிருத்திக்கான நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் முனீர் முஸ்தபா ,கள உத்தியோகத்தர் றமீஸ் உள்ளிட்ட முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
(ஹஸ்பர் ஏ.எச்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *