தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ONLINE ஊடாக..!
அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் கல்வி நடடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. அவைகள் மீண்டும் 2024.01.22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் இன்று இடம்பெற்ற ஆலோசனைக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக, அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிகழ்நிலை (online) முறைமையில் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் ஜனவரி 22, 2024 முதல், அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரும் வரை Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நிகழ்நிலை மூலம் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.
வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்ட சிதைவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுவதாகவும் மறுசீரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான சூழல் மாணவர்களுக்கு சுகாதார ரீதியான பாதிப்புகளையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினாலேயே மேற்படி தீர்மானத்துக்கு வந்ததாகவும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் குறிப்பிட்டார்.
இதேவேளை சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் என்று மேலும் தெரிவித்தார்.