இலங்கை பலஸ்தீன் நட்புறவு அமைப்பு தென்னாப்பிரிக்க தூதுவருடன் சந்திப்பு.
பலஸ்தீன் காசாவில் உள்ள மக்கள் , குழந்தைகள் படுகொலைக்கும் காசாவினை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் மனித உரிமை மீறல் சம்பந்தமாக தென் ஆபிரிக்கா பிரதமரும் அந்த நாட்டின் அரசாங்கமும் சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தமையிட்டு இலங்கை பலஸ்தீன் நட்புரவு அமைப்பு கொழும்பில் உள்ள தென் ஆப்பிரிக்கா உயர்ஸ்தானிகர் சந்தித்து நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கடிதத்தை ஒன்றையும் கையளித்தனர். இக் கடித்தத்தில் இவ் அமைப்பின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்க, செயலாளர் பௌசர் பாரூக் கையெழுத்திட்டுள்ளனர் மற்றும் செயற்குழு உறுப்பிணர்களான சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் என்.எம்.அமீன், அமீன் இஸ்ஸடீன், செயலாளர் பௌசர் பாருக் லேக் ஹவுஸ் முன்னாள் பத்திரிகையாசிரியர்களும் இப் படத்தில் காணப்படுகின்றனர்.
(அஷ்ரப் ஏ சமத்)