கல்பிட்டி பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா கலைகட்டியது.
இவ்வருடத்திற்கான தைப் பொங்கல் விழா கல்பிட்டி பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.மர்ஜானா அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
பொங்கல் விழா என்பது உலக வாழ் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இவ் விழா தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்கள், மாவட்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றில் வாழும் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. மேலும் பொங்கல் விழா உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நன்றி செலுத்தும் முகமாகக் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் கடந்த 15 ஆம் திகதி உலகம் முழுக்க இப்பண்டிகை கொண்டாடப்பட்டிருக்க அன்றைய தினம் இலங்கையில் விடுமுறை தினமாக இருந்தமையால் ஏராழமான அரச அலுவலகங்களில் இப் பண்டிகைக் கொண்டாட்டம் நேற்று (16) இடம்பெற்றிருந்தது. அதற்கமைய நேற்றைய தினம் காலை கல்பிட்டி பிரதேச செயலக வளாகத்தில் மாவிலை மற்றும் தென்னேலை தோரணங்கள் போடப்பட்டு மூவிண மக்களின் பங்குபற்றுதலோடும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்போடும் மிக விமர்சையாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)