Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

தேசிய அரசாங்கம் அமைப்பதில் கவனம்: பிரபலமானவருக்கு பிரதமர் பதவி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனம் சென்றுள்ளது.
இது தொடர்பில், எதிர்வரும் நாட்களில் பல பூர்வாங்க கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் அதற்கமைவாக, தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான கூட்டணி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என, ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், வடக்கில் தமிழ்க் கட்சிகள், பெருந்தோட்ட அரசியல் கட்சிகள், பொது மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு குழுவும், இந்தப் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர், கூட்டணியின் பலமான தலைவர் ஒருவருக்கு, பிரதமர் பதவி வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் எனவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *