அரசியலமைப்பு சபை மீது ஜனாதிபதி அதிருப்தி
நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்குமாறு அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதியினால் சிபாரிசு செய்யப்பட்டபோதும் அது தொடர்பில் அரசியலமைப்புச் சபை முறையான தீர்மானம் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தி ஜனாதிபதி கடந்த வாரம் காட்டமான கடிதம் ஒன்றை பேரவைக்கு அனுப்பியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நீதியரசரின் பெயர் பரிந்துரைக் சுப்பட்டபோது, ஜனாதிபதிக்கு பதில் அனுப்பிய அரசியலமைப்பு பேரவை. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு பேரவையின் இந்த தீர்மானத்தினால் நீதித்துறை நடவடிக்கைகள் மற்றும் நீதி நிர்வாகத்தில் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கடந்த வாரம் அனுப்பிய கடிதத்தின்மூலம் அரசியலமைப்பு பேரவைக்கு அறிவித்துள்ளார்.
தாம் அனுப்பிய சிபாரிசு தொடர்பில் அரசியலமைப்பு சபை சரியான தீர்மானம் எடுப்பது இன்றியமையாதது என
குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, பேரவையானது தனது தீர்மானத்தை பரிசீலிக்காமல் முடிவை எவ்வாறு எடுத்தது என்பதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.