மக்களின் பசி போக்கும் நகரம்..!!
இந்த நகரில் வசிக்கும் மக்கள் யாரும் இதுவரை பசித்திருந்ததே இல்லை. துபாய், குவைத், சவுதி அரேபிய போன்ற வளைகுடா நாடுகளில் எதையேனும் கற்பனை செய்துவிடாதீர்கள்.
ஃபலஸ்தீனில் இருக்கும் “கலீலுர் ரஹ்மான்” என்ற நகரம்தான் அது. வருடம் முழுவதும் அங்கு வசிக்கும் மக்களுக்கு அந்நகர மக்களே தினமும் ஆட்டுக் கறியுடன் கூடிய உணவை சமைத்துப் பரிமாறுகின்றனர்.
ஃபலஸ்தீனிலும் ஃபலஸ்தீனுக்கு வெளியிலும் வசிக்கும் செல்வந்தர்களால் இந்த உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இன்று நேற்றல்ல இப்ராஹீம் (அலை) அவர்கள் காலத்திலிருந்தே இவ்வாறு உணவு வழங்கப்படுவதாக அம்மக்கள் கூறுகின்றனர். (ஸுப்ஹானல்லாஹ்!)
“விருந்தினர்களின் தந்தை” என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். வீடு தேடி வரும் யாரையும் இப்ராஹீம் (அலை) பசியுடன் அனுப்பமாட்டார்கள். அந்த வழிமுறையைப் பின்பற்றியே அன்று முதல் இன்றுவரை உணவு வழங்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த உணவுக்கு “தகிய்யா இப்ராஹீம் (அலை)” என்று பெயர் வைத்துள்ளனர்.
சாதாரண நாளில் 500 நபர்களுக்கு உணவளிக்கப்படுகிறது என்றால், ரமழானுடைய நாட்களில் 3000 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது 500 குடும்பங்கள். வாசலுக்கு வருகின்ற அனைவருக்கும் கட்டாயம் உணவு கிடைக்கும். யாரையும் பசியுடன் திருப்பி அனுப்பமாட்டார்கள்.
ளுஹர் தொழுகை முதல் அஸர் தொழுகை வரை உணவு விநியோகம் நடைபெறும். ரமழானுடைய நாட்களில் தகிய்யா பணியாளர் குழுவினர், தன்னாவர்லர்கள் இந்தப் பணியை செவ்வனே நிறைவேற்றுகின்றனர். வசதி படைத்தவர்கள்கூட வரிசையில் நின்று இந்த உணவை வாங்கிச் செல்வது ஆச்சரியம்.
இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வருகின்ற மக்கள் எவ்வாறு பசியுடன் திரும்பமாட்டார்களோ அவ்வாறே அவர்களுடைய சொந்த நகரத்தில் வசிக்கும் மக்களும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஒட்டுமொத்த ஊர் மக்களின் நற்குணத்தைப் பாருங்கள். உண்மையில் இப்ராஹீம் (அலை) அல்லாஹ்வின் உற்ற நண்பர்தான்.
அல்லாஹு அக்பர்..!!