Sunday, March 22, 2026
Latest:
உலகம்விளையாட்டு

இஸ்லாமிய பெண்ணுடன் காதல் திருமணம்.. சிவம் துபேவின் லவ் ஸ்டோரி.. யார் இந்த அஞ்சம் கான்?

30 வயதாகும் சிவம் துபே, 2021ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அஞ்சம் கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இஸ்லாமியரான அஞ்சம் கான், உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். ஃபைன்ஸ் ஆர்ட்ஸ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள அவர், நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் செயலாற்றி வருகிறார். சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வீடியோ பாடல்களில் தோன்றி பிரபலமடைந்தவர்.

இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், சிவம் துபே சமூக வலைதளங்களில் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார். அதன்பின் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இந்து மற்றும் இஸ்லாமிய முறைகளில் திருமணம் செய்து கொண்டு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிவித்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் சில விமர்சனங்கள் எழுந்த நிலையில், எந்த பதிலும் அளிக்காமல் சொந்த வாழ்க்கையிலும், கிரிக்கெட் களத்திலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

அதன்பின் சிஎஸ்கே அணியுடன் இணைந்த அவருக்கு, கிரிக்கெட்டிலும் உச்சமாக அமைந்தது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சிவம் துபேவுக்கு, ஆண் குழந்தை உள்ளது. வெவ்வேறு மதங்களை பின்பற்றி வரும் தம்பதியான சிவம் துபே – அஞ்சம் கான் இருவரும் சொந்த வாழ்க்கையிலும் வெற்றிகரமாக இருந்து வருவது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *