Monday, March 23, 2026
Latest:
உள்நாடு

முச்சக்கர வண்டிகளுக்கு “QR” குறியீடு அறிமுகம்

முச்சக்கர வண்டிச் சாரதிகளின் தொழிற் சங்கங்களை ஸ்தாபிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, இடைக்காலத் துறை வழி நடத்தல் குழு, இன்று (16) ஸ்தாபிக்கப்பட்டது. .
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தலைமையில் துறைசார் குழுக்களை அமைப்பது தொடர்பாக, இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்தக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.
இதன்போது, முச்சக்கர வண்டிகளுக்கு கியூ. ஆர். குறியீடு முறையை அறிமுகம் செய்து வைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் முறைசாரா துறையில் பணி புரியும் அனைவருக்கும் தொழில் கௌரவத்தையும் பெருமையையும் வழங்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட “கரு சரு” திட்டத்தின் கீழ் இந்த இடைக்காலத் துறை வழி நடத்தல் குழு இன்று (16) ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *