Monday, March 23, 2026
Latest:
உள்நாடு

காற்றின் தரம் குறைவால் சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *