குலோபல் மிஷன்ஸ் நிறுவனத்தின் கெளரவிப்பு நிகழ்வு.
சர்வதேச மனித உரிமைகள் குலோபல் மிஷன்ஸ் நிறுவனத்தினால் ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி சமூகத்தில் மனித உரிமைக்காகவும் சமூக சேவைகளில் தன்னை அர்பணிக்கும் தொன்டர்களுக்கு மனித உரிமைப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை விருதுகள் வழங்கி கௌரவிப்பு நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சர்வதேச உலக பௌத்த மகா சம்மேளத்தின் தலைவர் கலாநிதி சுதத் தேவப்பெரும கலந்து கொண்டார் அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, இவ் மனித உரிமை அமைப்பின் தலைவர் கலைஞர் அமீர்க்கான் , பணிப்பாளர் கே. குப்பரலிங்கம் மற்றும் ஆஸ்திரேலிய சட்டத்தரணி திருமதி போல் மற்றும் திரு போல், பிரிகேடியர் சுரேஸ் பெரேரா ஆகியோர்கள் 50 க்கும் மேற்பட்டோர்களுக்கு மனித உரிமைப் பத்திரம், அடையாள அட்டையை வழங்கி வைத்தனர்.
இதில் மூவினங்களையும் சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள், மகளிர் அமைப்புகளின் பிரநிதிகள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர் அஜந்த உட்பட பலரும் கௌரவிக்கப்பட்டனர்.
(அஷ்ரப் ஏ சமத்)