உறுப்பு தானம் செய்து உயிர் காக்குமாறு மக்களிடம் கோரிக்கை
உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு, பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
உடல் உறுப்புக்களை தானம் செய்வதனால், பல உயிர்களைப் பாதுகாக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழக்கும் நோயாளிகளின் அத்தியவசியமான உடல் பாகங்களை தானம் செய்வதனால், அவற்றை வேறு நபர்களுக்குப் பொருத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென, உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளும் விசேட பிரிவொன்று, பேராதனை வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், பல்வேறு நோய் நிலைமைகளினால் உயிரிழப்போரின் உடல் உறுப்புக்களைத் தானம் செய்ய முன்வருமாறு, வைத்தியசாலையின் மருத்துவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, கல்லீரலைக் கூட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும் வசதிகள், தற்பொழுது பேராதனை வைத்தியசாலையில் காணப்படுவதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன..
(ஐ. ஏ. காதிர் கான்)