உலகம்

2024 இல் 50 நாடுகளில் களை கட்டப்போகும் தேர்தல்கள் திருவிழா

பிறந்துள்ள 2024 ஆம் ஆண்டில் மாத்திரம் 50 நாடுகளில், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடைபெறவிருப்பது, ஆச்சரியமான விடயமாகப் பாரக்கப்படுகிறது.
இதன்படி, அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பெய்ஜிங், இந்தியா, இலங்கை, தாய்வான், பாகிஸ்தான், இந்தோனேசியா, மெக்சிகோ, தென்னாபிரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
அத்துடன், சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க அதிபர் பதவிக்கு, நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல், இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற மற்றும் மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தெரிகிறது. பொருளாதார நெருக்கடியால் அரசியல் குழப்பம் ஏற்பட்ட இலங்கையிலும் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஒக்டோபர் மாதம் பிரேசிலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. உஸ்பெகிஸ்தானில் பொதுத் தேர்தல் ஒக்டோபர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியா மற்றும் எல் சல்வடோர், பெலாரஸ் ஆகிய நாடுகளில், அடுத்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானில் பெப்ரவரி 8 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. செனகல் பிராந்தியத்திலும் பெப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தென்னாபிரிக்காவில், மே மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கு இடையில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆபிரிக்கா கண்டத்தின் செனகல், தெற்கு சூடான் ஆகிய முக்கிய நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உலகின் இளைய நாடான தெற்கு சூடானில் டிசம்பரில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவிலும் மார்ச் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதுதவிர, ஐஸ்லாந்து, ஈரான், மால்டோவா, பனாமா, மெக்சிக்கோ, துனிஷியா உள்ளிட்ட நாடுகளும் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக, சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *