கிண்ணியாவில் காய்த்துக் குலுங்கும் மாதுளம் பழங்கள்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வட்டமடு பகுதியில் மாதுளை தோட்டச் செய்கை வெற்றியளித்துள்ளது.
குறித்த மாதுளை தோட்டச் செய்கையை, அதிகளவான பொது மக்கள் பார்வையிட்டு வருவதுடன், கொள்வனவிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் ஒருவரின் முயற்சியினால் இம் மாதுளை தோட்டச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ 1,500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.
மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதுடன், கொள்வனவிலும் ஈடுபடுகிறார்கள்.
மாதுளை தோட்டச் செய்கை, கிண்ணியா வரலாற்றில் முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.
வட்டமடு பகுதியில், ஏனைய சேனைப் பயிர்ச் செய்கை பலராலும் மேற்கொள்ளப்பட்டாலும், விசேடமாக மாதுளை செய்கை ஒரு புது விதமான உற்பத்திச் செய்கையாகப் பார்க்கப்படுகிறது.
பல மருத்துவ நற்குணங்களைக் கொண்ட மாதுளம் பழங்களுக்கு, அதிக கிராக்கியாகவும் காணப்படுகிறது.
மக்களின் பார்வையில், அதிக வரவேற்பைப் பெற்று விளங்குவதுடன், விசேடமாக அதிக பார்வையாளர்களை “கிண்ணியா மாதுளை தோட்டம்” ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தரமான பழங்களைக் கொண்ட இப்பழம் ஊடாக, பல நன்மைகளைப் பெறக்கூடியதுமாக மருத்துவக் குறிப்புக்கள் மூலமாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
கிண்ணியா பகுதியில் கச்சான் மற்றும் சோளச் செய்கை அதிகமாக மேற்கொள்ளப்பட்டாலும், இது ஒரு புது வகையான உற்பத்தியாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் மாத்திரமன்றி, வெளியூர்ப் பயணிகளும் தற்போது மாதுளம் பழங்களைக் கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(ஐ. ஏ. காதிர் கான்)