கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலுக்கு விஷேட பரிபாலன சபை . அதிரடியாக நியமித்தது வக்பு சபை.
கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு புதிய 09 உறுப்பினர்கள் கொண்ட விசேட பரிபாலன சபை ஒன்றை வக்பு சபை நியமித்துள்ளது. இந்நியமனம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 12ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக அலா அஹமட் கையெழுத்திட்டு அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தலைவராக கடமைவகித்த வர்த்தகர் முஸ்லிம் சலாஹூதீன் தெரிவிக்கையில் 2 நாட்களுக்குள் எங்களது சபை பொது கூட்டம் நடைபெற் இருந்தது. அதில் உறுப்பினர்கள் கொண்ட புதிய சபையை தெரிவு செய்வதற்காக இருந்த சமயத்தில் வக்பு திணைக்களம் ஒர் விசேட சபை ஒன்றை நியமித்துள்ளது. இவ் புதிய உறுப்பினர்கள் விபரம் வெள்ளிக்கிழமை முஸ்லிம் சலாஹூதீன் அவர்களினால் அறிவிக்கப்பட்டது.
(1)எம்.ஏ.எம் சக்வான், (2)அப்துல் ரகுமான் ஹாரூன்,(3) ஏ.ஏ.எம். யாசீர், (4)எம்.எஸ்.எம். சஹாஸ், (5)ஜெஸ்மின் மன்சூர், (6)மொஹமட் ஏ. காதர், (7) றிசான் நசீர்.,(8) முன்னாள் மேயர் ஹுசைன் மொஹமட், (9)எம்.எச் ஒமர் ஆகியோர்கள் விசேட பரிபாலன சபை உறுப்பினர்களாக கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்டுள்ளது.