உள்நாடு

தலைவர்கள் வராத மாநாடுகளுக்குச் சென்று 200மில்லியன் மேலதிகமாக கேட்கிறார் ஜனாதிபதி. இதற்கு அனுமதி வழங்க முடியாது. -பாராளுமன்றில் அனுர குமார திஸாநாயக்க.

(பாராளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தின் போது – 12.01.2024)

குறிப்பாக நேற்று (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீட்டில் நிதி ஒழுகலாறு மற்றும் பொருளாதார நெருக்கடி பற்றி பேசப்படுகிறதுதானே? நாம் நிதி ஒழுகலாறு பற்றி பார்ப்போம். 1300 மில்லியன் ரூபா அதாவது, 13,000 இலட்சம் ரூபா அரசாங்க பொறுப்பு முயற்சிகள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எதற்காக? ஸ்ரீலங்கா டெலிகொம் மறுசீரமைப்புக்கான வசதிகளை வழங்குவதற்காக. எனவே, இவ்வாறான மேலதிக ஏற்பாட்டில் 13,000 இலட்சம் ரூபா எவ்வாறு செலவாகியது என்று பாராளுமன்றத்திற்கு கூறவேண்டும். ஏனென்றால், அதனை விற்பனை செய்வதற்காகவா இத்தனை செலவு என்று சிந்தித்து பார்க்க வேண்டும். இங்கு நிதி ஒழுகலாறு இருக்கிறதா?

அதே மதிப்பீட்டில் ஜனாதிபதிக்கு மேலதிக செலவினமாக 200 மில்லியன் ரூபா அதாவது, 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேலதிக பணத்தொகை ஜனாதிபதிக்கு எதற்காக? வெளிநாட்டு விஜயங்களுக்கு, எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்புக்கான ஏற்பாட்டின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவாகும். எமக்குத் தெரியும் குறைநிரப்பு மதிப்பீடு என்பது வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்த பணத்திற்கு மேலதிக ஒதுக்கீடாகும். ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக, வாகனங்களுக்காக, வாகன பராமரிப்புக்காக, வரவு செலவு திட்டத்தில் பெருந்தொகையான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் இந்த செலவு தலைப்பு சுமையென கூறியிருக்கிறோம். தற்போது மேலும் 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்படுகிறது. நிதி ஒழுகலாறை முதலில் ஜனாதிபதி வெளிக்காட்ட வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் போதாதென்று மேலதிகமாக பணம் ஒதுக்கப்படுகிறதென்றால் ஜனாதிபதியின் நிதி ஒழுகலாறு எங்கே?

இங்கிலாந்திற்கு 4 தடவைகள், ஜப்பானுக்கு 2 தடவைகள். இப்பொழுது இலங்கையில் மிக நீண்ட விஜயம் மேற்கொள்கிறார். 12, 13 நாட்கள் போகபோகின்றார். 14 மாதங்களில் 14 விஜயங்கள்! வேறு நாட்டின் ஜனாதிபதிகள் இப்படி போயிருக்கிறார்களா? ஒன்று இறந்த வீடு இல்லையென்றால் திருமண வைபவம், இல்லையென்றால், உலகில் தலைவர்கள் வராத மாநாட்டிற்கு சென்று, சுற்றாடல் மாநாட்டிற்கு சென்று, எந்த தலைவர்களும் வராவிட்டால் இவர் உரை நிகழ்த்துவார். அப்படிச் செய்து பாராளுமன்றத்திற்கு மீண்டும் வந்து விமான பயணத்திற்காக 200 மில்லியன் ரூபாவை கேட்கின்றார்.

நிதி ஒழுகலாறு பற்றியும் நிதி உதவி பற்றியும் பேசுகிறார்கள். ஆனால், பாடசாலை பிள்ளைகளுக்கு உணவு வேலைக்கான நிதியைக் கொடுக்கவில்லை. எஞ்சிய பகுதி இன்னமும் கிடைக்கவில்லை. பாடசாலை சீருடைக்கு பணம் கிடைக்கவில்லை. ஆனால், ஜனாதிபதிக்கு 2000 இலட்சம் ரூபாவை வைத்திருக்கின்றோம். ஆசிரியர்களுக்கு வினாத்தாள்களை சரிபார்ப்பதற்கான கொடுப்பனவு செலுத்தப்படவில்லை. பிரயாணச் செலவுகளை ஏற்று அவர்கள் விடைத்தாள்களை பார்க்க போகின்றார்கள். ஆனால் இந்தக் கொடுப்பனவு செலுத்தப்படவில்லை. ஆனால் ஜனாதிபதிக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்திற்கு மேலதிக பணத்தொகை ஒதுக்கப்படுகிறது. வரவு செலவில் அவருக்கு சிறிய தொகை ஒதுக்கப்படுவதில்லை. பெரிய தொகையே ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொருநாளும் பாராளுமன்றதில் ஜனாதிபதிக்கான இந்த செலவு தலைப்பு சுமையென கூறியிருக்கிறோம். அவ்வாறான பெருந்தொகை ஒதுக்கப்பட்ட வேளையிலும் வெளிநாட்டு பயணத்திற்காகவும் வாகனத்திற்காவும் எரிபொருளுக்காகவும் பராமரிப்புக்காகவும் மேலதிகமாக இந்த 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது. இது பொதுப்பணம். ஜனாதிபதி சிந்தித்து பார்க்க வேண்டும். பாராளுமன்றம் சிந்திக்க வேண்டும். நாடு படுகுழியிலாம். நாடு சீரழிந்துவிட்டதாம். பாலுக்கு வெட். டீசலுக்கு வெட், பாடசாலை உபகரணங்களுக்கு வெட். சுகாதார உபகரணங்களுக்கு வெட். அவ்வாறு சேகரிக்கின்ற பணத்தை ஜனாதிபதியின் சவாரிக்காக செலவிடுகின்றார்.

மக்களும் பரிசுத்தமான தொழிலதிபர்களும் வரிசெலுத்த தயார். ஆனால், செலுத்தப்படுகின்ற வரிக்கு என்ன ஏற்பட்டுள்ளது? ஜனாதிபதி ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும்பொழுது ஒரு அம்பியுலன்ஸ் பின்னால் வருகிறது. முன்னாள் ஜனாதிபதி விஜேராமவில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும்பொழுது பின்னால் அம்பியுலன்ஸ் வருகின்றது. சுகாதார அமைச்சருக்கு தெரியும்தானே? வைத்தியசாலைக்கே அம்பியுலன்ஸ் இல்லை. நோய் பிண்டங்களா இவர்கள்? இது பொது மக்களின் பணம். இந்தக் கூத்தை வீதியில் செல்கின்ற தொழிலதிபர்கள் காணுகின்றார்கள். பாருங்கள் தலைவர்களின் பின்னால் அம்பியுலன்ஸ் வருகின்றன. எனவே, மக்கள் மீது பாரிய வரிச் சுமையைதானே ஏற்றி வருகின்றீர்கள். மக்கள் அவர்கள் செலுத்துகின்ற வரிக்கு என்ன நேரிடும் என்று சிந்திப்பார்கள். எனவே, உங்களுடைய நிதி ஒழுகலாறு, இந்த பொருளாதார நெருக்கடி என்பதெல்லாம் பொய்க் கதை. நீங்கள் உங்களுடைய சுகபோகத்திற்காக மக்களின் பணத்தை செலவிடுகிறீர்கள்.

நாமல் ராஜபக்ஸ, சித்தப்பா, சின்ன சித்தப்பா, பெரியப்பா எல்லோருமே அரசாங்க வீடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் வெட்கப்பட வேண்டும். மகனும் அரசாங்க வீட்டில் இருக்கிறார். எப்படி மகனுக்கு அரசாங்க வீட்டைக் கொடுக்க முடியும்? பாராளுமன்றத்திற்கு வந்து கூறுங்கள் பார்ப்போம். எனவே, மக்கள் இதற்குத்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நியாயமான வரியை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும். ஆனால், வரிக்கு என்ன நேரிடுகின்றது? என்ற கேள்வி இருக்கிறது.

அடுத்ததாக பார்ட்டி போடுவதற்காக சென்றதை அவதானிப்பு சுற்றுலாவுக்குச் சென்றதாக கூறுகிறார்கள். அவர்கள் இரவில்தான் போகின்றார்கள். இரவு அவர்கள் எவற்றை அவதானிக்கப் போகிறார்கள் என்று எமக்குத் தெரியும். 20 மீட்டர் தூரத்திற்குத்தான் கண் தெரியும். ஆனால், பொது மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி நெருக்கடி நேர்ந்துள்ள நேரத்திலே இவர்கள் இரவில் அவதானிக்க போகின்றார்களாம். ஆகவே, இந்தக் குறைநிரப்பு மதிப்பீடு பற்றி இந்தப் பாராளுமன்றத்திற்கு தெளிவுப்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களுக்காக, வாகன பராமரிப்புக்காக எவ்வளவு செலவாகிறது? மேலதிகமாக ஏன் இவ்வளவு செலவாகின்றது? டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்காக 1300 மில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு ஏன் சேர்க்கப்படுகின்றது? தனியார் மயமாக்குவதற்காக ஏன் இவ்வளவு தொகை செலவிடப்படுகின்றது? என்பதை பற்றி பாராளுமன்றத்தில் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

 

ஊடகப் பிரிவு,
தேசிய மக்கள் சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *