உள்நாடு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளுக்கு முரண். -சட்டத்தரணி சுனில் வட்டகல

நேற்று முன்தினம் (10 ஆந் திகதி) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் பல திருத்தங்களை உள்ளிடக்கியதாக நீதி அமைச்சர் எடுத்தியம்ப முற்பட்டார். எனினும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த சட்டமூலத்துடன் தொடர்புடைய 2023 செப்டெம்பர் 15 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் பாகம் இரண்டுக்கான குறைநிரப்பி என்றே இருக்கின்றது. அமைச்சர் சபாபீடத்தில் சமர்ப்பித்தது பழைய தட்டினையாகும். இதற்கு முன்னர் இந்த வர்த்தமானப் பத்திரிகை பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ‘ஒன்லயின்’ சட்டமூலமும் அதனோடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பற்றிய எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கான எதிர்பார்ப்பு அரசாங்கத்திற்கு கிடையாதென நாங்கள் அது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவின்போது சட்டத்துறை தலைமை அதிபதி அறிவித்தார். நாட்டின் ஒட்டுமொத்த மக்களினதும் பிரமாண்டமான எதிர்ப்பு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு தோன்றியதால் அரசாங்கத்தின் சார்பில் சட்டத்துறை தலைமை அதிபதி உயர்நீதிமன்றத்திற்கு அதனை அறிவித்தார்.

இதே சட்டம் ஏப்ரல் மாதத்தில் கெசட்டில் வெளியிடப்பட்டு, மீண்டும் திருத்தப்பட்டு, செப்டெம்பர் மாதத்தில் கொண்டுவரப்பட்டது. அது தற்போது மூன்றாவது தடவையாகவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓர் எமுத்தையேனும் திருத்தாமல் செப்டெம்பர் மாதத்தில் சமர்ப்பித்த சட்டமூலத்தையே மீண்டும் கொண்டுவந்திருக்கிறார்கள். அதனால் மக்களை தவறாக வழிநடாத்த செயலாற்ற வேண்டாமென நாங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறோம். இந்த சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கு முரணானது. அரசியலமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது உறுப்புரைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ள மக்களின் இறைமைத் தத்துவத்திற்கு முரணானது. இந்தச் சட்டத்தின் உள்ளடக்கம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கும் மக்களின் இறைமைத் தத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இரண்டு உறுப்புரைகளின் ஒவ்வோர் எழுத்திற்கும் முரணானதாகும். அதைப்போலவே சமர்ப்பித்துள்ள பிரிவுகளுக்குள்ளே பயங்கரவாதம் என்பதற்கான பொருள்கோடல் வழங்கப்படவில்லை. எனினும் பயங்கரவாத தவறுகள் பற்றி பல உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. பயங்கரவாத தவறு என்பதற்கான பல விரிவான தெளிவுபடுத்தல்கள் தரப்பட்டுள்ளன. உதாரணமாக பயங்கரவாதத்தை தூண்டுதலுடன் தொடர்பாகவும், 11 ஆவது பிரிவில் இருந்து சம்பந்தப்பட்ட கூற்றுகளை வெளியிடுதல் பற்றியும், 12 ஆவது பிரிவில் பயங்கரவாதம் பற்றியும், ஏனைய பிரிவுகளில் தகவல்களை வழங்குதல் மற்றும் தவறவிடுதல் என்றவகையிலும் பல உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. எனினும் இங்கு குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பிரிவும் உள்ளடங்குகின்ற விதத்தில் குற்றவியல் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை நாங்கள் மிகுந்த பொறுப்புடன் கூறுகிறோம். அதபை்போலவே தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றங்கள் சம்பந்தமான சட்டங்களுடனும் தொடர்புடைய பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 19 ஆவது பிரிவின் பொருள்கோடல் மூலமாக பிடியாணையின்றி கைதுசெய்வதற்கான அதிகாரம் எந்தவொரு பொலீஸ் உத்தியோகத்தருக்கும் எந்தவொரு முப்படை உத்தியோகத்தருக்கும் கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மின்சாரசபை ஊழியர்கள் அண்மையில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள் போன்ற வேலைத்தளங்களில்கூட முன்னெடுக்கின்ற நியாயமான ஆர்ப்பாட்டங்களுக்கும் இடமளிக்காதிருக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிராக குரல்கொடுப்பவர்களைக் கைதுசெய்து தடுத்துவைத்தலுடன் ஏற்புடைய ஏற்பாடுகள் இதில் இருக்கின்றன. நாட்டின் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தடுத்துவைப்பதற்கான கட்டளையை விடுக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவேண்டுமென எந்தவோர் இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

புனர்வாழ்வு அதிகாரசபை சட்டம், சமூக வலைத்தளங்களை அடக்குவதற்கான சட்டம், ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டுவர செயலாற்றுகின்ற அரசாங்கம் அந்தச் சட்டத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்ற, நியாயமான மக்கள் எதிர்ப்புகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. ரணில் ராஜபக்ஷ ஜுன்டா இந்த தேர்தல் வருடத்தில் மேலும் ஒருநாளாவது அதிகாரத்தில் இருப்பதற்காக இந்த சட்டங்களை ஆக்கி வருகின்றது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் இந்த பயணத்தைத் தொடர நாங்கள் இடமளிக்கமாட்டோம். இந்தச் சட்டங்களை அங்கீகரித்துக்கொண்டால் நோயாளர்களின் உயிர்களை ஆபத்தில் வீழ்த்திய கெஹெலிய ரம்புக்வெல்ல அப்பாவி எனக் கூறுவதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்த ஈனியா சட்டத்திற்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு பல மனுக்களை சமர்ப்பிப்போம். இந்த படுமோசமான சட்டத்தை தோற்கடிப்பதற்காக நாங்கள் நாட்டின் எல்லா இடங்களிலும் முனைந்து செயலாற்றுவோம்.

 

(தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.01.11)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *