வலுப்பெறும் சீன மாலைதீவு உறவு. -20 ஒப்பந்தங்களில் கைச்சாத்து..
சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான 20 ஒப்பந்தங்களில் சீனாவும், மாலைதீவும் நேற்று(10) கையொப்பமிட்டன.
சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மாலைதீவு அதிபா் முகமது மூயிஸ், அந்நாட்டு அதிபா் ஷி ஜின் பிங்கை நேற்று(10) சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அதன் முடிவில், இரு தரப்பு உறவை மேம்படுத்துவற்கான 20 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் மாலைதீவு அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பல்வேறு துறைகளில் நல்லுறவை மேம்படுத்துவற்கான 20 முக்கிய ஒப்பந்தங்கள் சீனாவுக்கும், மாலைதீவுக்கும் இடையே கையொப்பமாகின. இரு நாட்டு அதிபா்களும் இந்த நிகழ்ச்சியை நேரில் பாா்வையிட்டனா் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா, பேரிடா் மேலாண்மை, கடல்சாா் பொருளாதாரம், எண்மப் பொருளாதாரம், வா்த்தக வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடா்பாக இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.