பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
பிளாஸ்டிக் போத்தல் குடிநீரைக் குடிப்பதால் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இருந்து குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் பிரபலமான மூன்று பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களைப் பயன்படுத்தி அவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
ஒரு பிளாஸ்டிக் குடிநீர் போத்தலில் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் புற்றுநோயை உண்டாக்கும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது இரத்த அணுக்கள் மற்றும் மூளை உட்பட உடலின் பல முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.