லமிச்சன்னேவிற்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம்.
கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நேபாள் கிரிக்கெட் வீரரான சந்தீப் லமிச்சனேவுக்கு காத்மண்டு நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நேபாள் கிரிக்கெட் அணியின் முன்னனி சுழல்பந்து வீச்சாளரான சந்தீப் லமிச்சன்னே காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தின் ஒற்றை கடந்த மாதம் 18 வயதுடைய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். அதன் போது லமிச்சன்னேவுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இவ் வழக்கின் நீதிபதியான பெஞ்ச் இக் குற்றத்திற்கான தீர்ப்பினை ஜனவரி 10 அன்று அறிவிப்பதாக கூறியிருந்தார்.
இதற்கமைய நேற்று (10) குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட லமிச்சன்னேவுக்கு நீதிபதி பெஞ்ச் 8 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன் 2255 அமெரிக்க டொலர்கள் அபராதமும், பாதிக்கப்பட்ட 18 வயது பெண்ணிற்கு இழப்பீடாக 1500 அமெரிக்க டொலர்களும் வழங்க உத்தரவிட்டார். இருப்பினும் இந்த தீர்ப்பினை ஏற்க முடியாது நாங்கள் மேல் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என லமிச்சன்னேவின் வழக்கறிஞரான சரோஜ் கிமிரே தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேபாள் கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த லமிச்சன்னே குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை தலைமைப் பதவியிலிருந்து நீக்கியது நேபாள் கிரிக்கெட் சபை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)