இந்தியாவுக்கு எதிரான ரி20 தொடரிலிருந்து ரஷீட்கான் நீக்கம்.
கீழ் முதுகில் அறுவை சிகிச்சை செய்து குணமடைந்து வரும் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான ரஷீட்கான் ஆப்கானிஸ்தான் அணியுடன் இணைந்துள்ள போதிலும் இந்திய அணிக்கு எதிராக 3போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்காக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி நாளைய தினம் முதல் போட்டியில் பங்கேற்கிறது.
இந்நிலையில் உலகக்கிண்ண ஒருநாள் தொடருக்குப் பின்னர் முதுகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரஷீட்கான் அதிலிருந்து குணமாகி வருவதால், அவர் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இடம்பெற மாட்டார் என ஆப்கானிஸ்தான் அணியின் தலைவரான இப்ராஹிம் சத்ரான் தெரிவித்துள்ளார். மேலும் ரஷீட்கான் தென்னாபிரிக்க பிரீமியர் லீக் மற்றும் பங்களாதேஷ் பிரீமியர் ஆகியவற்றிலும் பங்கேற்க மாட்டார் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இப்ராஹிம் சத்ரான் குறிப்பிடுகையில் “ரஷீத் இல்லாமல் நாங்கள் போராடுவோம். ஆனால் அவ்வளவு அல்ல, ஏனென்றால் அவரது அனுபவம் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. ஆனால் இது கிரிக்கெட் ஆகவே எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.” என்றார்.
(அரபாத் பஹர்தீன்)