உள்நாடு

சட்டத்தரணியானார் நுஸ்ரத் நிசாம்

தர்கா நகரைச் சேர்ந்த பாத்திமா நுஸ்ரத் நிசாம் இலங்கை மேல் நீதிமன்ற சட்டத்தரணியாக அண்மையில் பதவியேற்றார்

களுத்துறை மாவட்டத்தின் களுத்துரை கல்வி வலய களு/ தர்கா நகர் பெண்கள் மகளிர் தேசிய பாடசாலையின் பழைய மாணவியான இவர்
ஒரு நீதிபதியாக உருவாவாகி தனது பெற்றோருக்கும் சமூகத்துக்கும் பெருமை சேர்ப்பதே தனது பிரதான இலட்சியம் எனக் கூறுகிறார்.

பாடசாலை காலத்தில் அதன்பின் பல்கலைக் கழத்திலும் பல்வேறு துறைகளில் திறமை காட்டிய இவர் சமூகம் கல்வித்துறையில் எழுச்சி பெற வேண்டும் எனவும் இதற்கான தனது பங்களிப்பை தொடர்வதாகவும் கூறுகிறார்.

இவர் எப்போதும் சிறிய வயது முதல் உண்மை நேர்மைக்கு குரல் கொடுக்கும் ஒரு முன்மாதிரியானவராகவும் அநீதி பக்க சார்புகளுக்கு எதிராக செயற்பட்டமை போன்ற இவரிடம் காணப்பட்ட சிறந்த குணாதிசயங்கள் இவரை ஒரு சட்டத்தரணியாக மாற்றியது என பிரதி அதிபரும் இவரது மாமனாருமான அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.பர்ஹான் கூறுகிறார்.

இவர் தர்கா நகரைச் சேர்ந்த சமூக சேவையாளர் மொகமட் நிசாம் பாத்திமா பாத்திமா (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் புதல்வியாவார்.

 

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *