உள்நாடு

விமான நிலையத்தில் 221 மாணிக்கக் கற்களுடன் சீனப் பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 221 மாணிக்கக் கற்களை சட்ட விரோதமான முறையில் சீனாவிற்குக் கொண்டு செல்ல முயன்ற சீனப் பெண்ணை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக, விமான நிலையத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மாணிக்கக் கற்கள் கையிருப்பின் பெறுமதி, ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சத்து முப்பத்தி ஏழாயிரத்து எண்ணூற்று எட்டு ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக, விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அவர் கொண்டு வந்த பொதியில் இந்த மாணிக்கக் கற்களை மறைத்து வைத்திருந்த நிலையில், அவை மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த பெண்ணையும் (09) கைது செய்தனர்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *