விளையாட்டு

4ஆவது தடவையாக றக்பி உலகக் கிண்ணத்தை வென்று தென்னாப்பிரிக்கா சாதனை

2023ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பிரபல நியூசிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி சம்பியனாக மகுடம் சூடியது.

இதன்மூலம் 4ஆவது தடவையாக றக்பி உலகக் கிண்ணத்தை வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது. இதற்கு முன்னர் கடந்த 1995 ஆம் ஆண்டிலும் 2007 ஆம் ஆண்டிலும் 2019 ஆண்டிலும் தென்னாபிரிக்கா அணி றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, றக்பி உலகக் கிண்ணத்தை அதிக தடவைகள் கைப்பற்றிய அணியாகவும் தென்னாப்பிரிக்கா வரலாற்றில் இடம்பிடித்தது.

உலகக் கிண்ண றக்பி தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (29) பிரான்ஸில் இடம்பெற்றதுடன், இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 12:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

அத்துடன், தென்னாபிரிக்க அணி றக்பி உலகக் கிண்ணத் தொடரை கைப்பற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *