ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சீனா விஜயம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (15) இரவு சீனா செல்லவுள்ளார்.
நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் அங்கு இடம்பெறவுள்ளது. மேலும், சீனாவில் உள்ள பல உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
Belt and Road முயற்சியின் 10வது ஆண்டு உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார்.