“அர்ஷின் நிழல் நோக்கி” நூல் வெளியீட்டு விழா
ஓட்டமாவடியைச் சேர்ந்த இஸ்லாமியப் பிரச்சாரகரும், எழுத்தாளருமான எம்.ஐ.எம்.அன்வர் (ஸலபி,மதனி) எழுதிய அர்ஷின் நிழல் நோக்கி எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (14) இடம்பெற்றது.
ஓட்டமாவடி – மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு கலாநிதி எச்.எல்.முகைதீன் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.இதில், ஆரம்ப நிகழ்வான (கிராஅத்) அல் குர்ஆன் வசனங்களை ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் எம்.என்.எம்.சம்ஹான் வழங்கினார்.அத்தோடு, வரவேற்புரையை ஏ.இர்பான் (ஸலபி,மதனி) நிகழ்த்தியதோடு, நன்றியுரையை எம்.எச்.எம்.றிஸ்வி (சிறாஜி) வழங்கினார்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் முதல் பிரதியினை சிரேஷ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான் பெற்றுக் கொண்டார்.நூல் ஆய்வு உரையினை பன்னூலாசிரியர் அஷ்ஷெய்க் ஹபீழ் எம்.முஸ்தபா (ஸலபி) நிகழ்த்தியதோடு, ஏற்புரையினை நூலாசிரியர் எம்.ஐ.எம்.அன்வர் (ஸலபி, மதனி) நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜெஸீல் (ஸலபி) கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்ஷெய்க் பௌஸுல் புகாரி (ஸலபி) கலந்து கொண்டார்.ஏனைய அதிதிகளாக, அஷ்ஷெய்க் எஸ்.அலாவுதீன் (ஸலபி) ஆசிரியர், ஓய்வு பெற்ற அதிபர் எம்.சீ.எச்.முஹம்மத், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், கல்குடா ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.தாஹிர் (ஹாமி), வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் என்.சஹாப்தீன் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிழ்வினை ஊடகவியலாளர் எச்.எம்.எம்.பர்ஸான் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
(எம்.எப்.சுஆத் அப்துல்லாஹ்)