“பணம் திணித்து வாக்குகளை குவிக்கும் அரசியல் சதி: சசிகுமார் கண்டனம்”
இளைஞர்களின் சுய சிந்தனையை அடக்கி, பணத்தை கையளித்து வாக்கு பெறு முயற்சிகள் பல கட்சிகளின் சதி என சசிகுமார் குரல் கொடுத்துள்ளார்.
“மக்கள் விருப்பம் வெளிப்படையாக இருக்க முடியாத நிலையை இந்த கட்சிகள் உருவாக்குகின்றன; இளைஞர்களை பணத்தின் அடிமைகளாக்கி, உண்மையான மக்கள் சேவகர்களுக்கு வாக்கு செலுத்தவே முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது,” என அவர் வலியுறுத்தினார்.
நிகழ்கால அரசியலில் இவ்வாறான விஷயங்கள் அதிகரித்து வருவதாக சசிகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசி சின்னத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் வத்தளை மாபொலை மாநகர சபை உறுப்பினர் சுப்பிரமணியம் சசிகுமார் தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அவரது அணுகுமுறையில், “கம்பஹா மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பல ஆண்டுகளாக நம்பகத்தன்மையுடன் மக்கள் சேவைகளை செய்தபோதிலும், தமிழர்களின் வாக்கு சிதறடிக்கப்பட்டதினால், நாடாளுமன்றம் செல்ல முடியாத நிலையுக்கு தள்ளப்பட்டனர்.
இந்த முறை, தமிழர்களின் பிரதிநிதித்துவம் உறுதியாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என சசிகுமார் தன்னம்பிக்கையுடன் கூறினார்.மேலும், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் பல முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
(ஏ.சி பௌசுல் அலிம்)