IMF பிரதிநிதிகளை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை மீண்டும் சந்தித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (22) கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் உயர் மட்டக் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர், துணைப் பிரதானி திருபதி Katsiaryna Svirydzenka, வதிவிடப் பிரதிநிதி திருமதி மார்த்தா வோல்டெமிகல் மற்றும் வதிவிட பொருளாதார நிபுணர் மானவி அபேவிக்ரம ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் தொடர்பில் இங்கு இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.