1 லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்று முனீர் முழப்பர் வெற்றி
கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அஷ்ஷெய்க் முனீர் முழப்பர் 109,815 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
முஸ்லிம்களுடன் சிங்கள மக்களும் இணைந்து முனீர் முழப்பரை அதிக வாக்குகளால் வெற்றியீட்டச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் கல்வி பயின்று பட்டதாரியாகி சக வாழ்வுக்கான பணிகளில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட இவர் பெளத்த தேரர்கள் மற்றும் சிங்கள மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அனுர குமார திஸாநாயக்கவின் வெற்றிக்காக நாடு முழுவதும் சூறாவளி பிரசாரங்களை மேற்கொண்டார்.
கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக நளிமி ஒருவர் பாராளுமன்றம் நுழைகிறார்.
அதிலும் குறிப்பாக கம்பஹா மாவட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் இவர் தேர்வுசெய்யப்படுகிறார்.
இனவாதம், பிரதேசவாதம் போன்ற கோசங்களைத் தாண்டி அனைத்து சமூகங்களாலும் மதிக்கப்படுகிற தலைமைகள் உருவாவது காலத்தின் கட்டாயமாகும்.