‘ருகையா’ கிளினிக்மீண்டும் திறந்து வைப்பு!
பலத்துறையில் நீண்ட காலத்துக்குப் பின்னர் புனரமைக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை நிலையமான ‘ருகையா கிளினிக்’ நேற்று வியாழக்கிழமை (07.11.2024) மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவில் நீர் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் ருவந்தினி, பொதுச் சுகாதார அதிகாரி டாக்டர் ருவன் மற்றும் சுகாதார சேவை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஹாரிஸ் ஹுசைனின் அயராத முயற்சி காரணமாக ஊர் தனவந்தர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட 15 லட்சம் ரூபா செலவில் இந்த இந்தக் கிளினிக் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
புனரமைப்புப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளதைப் பாராட்டிய நீர்கொழும்பு மாநகரசபை சுகாதார அதிகாரிகள் மேலும் பல உபகரணங்களை இந்த கிளினிக்கு வழங்கினார்கள்.
பலகத்துறைப் பள்ளிவாசல் காணியில் இயங்கும் இந்த கிளினிக்கில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சகல மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
(எம்.ஜே.எம். தாஜுதீன்)