“பிரித்தாளும் தந்திரோபாயங்கள் ஊடாக அரசியல் வியாபாரம் செய்து இருக்கிறார்கள்”
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் பிர்தெளஸ் நளீமி.
நீண்டகாலமாக அரசியல் என்பது பிரித்தாளும் தந்திரோபாயங்களை அரசியல் வியாபாரம் செய்வதற்கு மூலதனமாக நமது அரசியல்வாதிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பிர்தெளஸ் நளீமி தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (25) காத்தான்குடி பாம் வீதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் ‘ஐக்கியப்பட்ட எதிர்காலத்தை நோக்கி’ எனும் தலைப்பில் உரையாற்றும் போதே இக்கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது 1940 களில் தந்தை செல்வா தமிழரசு கட்சியை ஆரம்பிக்கும் போது ஏறாவூரிலும் ,மட்டக்களப்பு மாவட்டத்திலும், அம்பாறையிலும் முஸ்லிம் சகோதரர்கள் இணைந்து அரசியல் செய்தார்கள்.
ஆனால் அதன் பின்னரான காலப்பகுதியில் மக்கள் மத்தியில் இன ரீதியாக, மத ரீதியாக, கட்சி ரீதியாக பிரிவினைகளை உருவாக்கி தமிழர்கள் வேறாகவும்,முஸ்லிம்கள் வேறாகவும்,பெளதர்கள் வேறாக பிரிந்து அரசியல் செய்யும் நிலைமையை உருவாக்கி இலாபம் கண்டார்கள்.
ஆனால் இந் நிலை மாற வேண்டும் இலங்கை தேசத்தில் பல்லின மக்கள் மத்தியிலும் ஒற்றுமை கட்டியெழுப்ப வேண்டும் அனைவரும் ஒருமித்து ஐக்கிய இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
(எம்.பஹத் ஜுனைட்- காத்தான்குடி செய்தியாளர்)