10 நிமிடங்களுக்கு முன் வெளியாகிய புலமைப் பரிசில் வினாத்தாள்.விசாரணைகள் துரிதம்
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்ற கடந்த (15) அனுராதபுரம் பரீட்சை நிலையமொன்றில் பரீட்சை ஆரம்பிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன்னர் முதல் வினாத்தாளை வட்ஸ்அப் ஊடாக வெளியாக்கியமை தொடர்பில் பரீட்சை நிலைய உதவித் தலைமை ஆசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்களுக்கு எதிராக
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் மேலதிக ஆணையுளர் நீல் அதுகோரள தெரிவித்தார்.
பரீட்சை நடைபெறுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்னர் குறித்த பரீட்சை வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் புகைப்படம் எடுத்து பல்வேறு பகுதிகளிலுள்ள பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ளமை தொடர்பில் உதவித் தலைமை ஆசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பரீட்சை திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆறு ஆசிரியர்களும் பரீட்சை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாய்மொழி பெறப்பட்டுள்ளது.
குறித்த புகைப்படம் அனுராதபுரம், நொச்சியாகம மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பகிரப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் பரீட்சை மீதான நம்பிக்கை இழக்கலாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)